வெள்ளி, செப்டம்பர் 28

அல்வாய் பழைய வேதக்கோயில்



வடமராட்சியில் உள்ள "அல்வாய் பழைய வேதக்கோயில்"  என்று அழைக்கப்படும் இடம். இது இலங்கை மரபுரிமைகளின் கீழ் பாதுகாக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒன்றும் உள்ளது. இதுவே பின்னர் சக்கோட்டையில் புதிய தேவாலயமாகக் கட்டப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

வடமராட்சியின் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றாக இன்றும் அழகூட்டிக் கொண்டிருப்பது. தொடர்ந்து பேணப்படவேண்டும்.

(கைபேசிக் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் இவை.
படங்கள்  - துவாரகன்)







3 கருத்துகள்:

  1. நண்பரே, மிகவும் பயனுள்ள தகவல். உங்கள் படங்களையும் செய்தியையும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. Jeyakumar Antoni மேலதிக தகவல்:

    பழையவேதக்கோயிலைப் பழங்கோயில், பழங்கோயிலடி என்றும் சக்(ற்)கோட்டையைச் சேர்ந்த வேதக்காரர் (கிறீஸ்த்தவர்கள்) இன்றும் அழைப்பர். சக்கோட்டை மக்களின் சேமக்காலை/சவக்காலை பழங்கோயிலடியிலேயே இருக்கிறது. மீனவ மக்களின் பாதுகாவலராகக் கருதப்படும் பரிசுத்த சவேரியாரின் (சில மீனவ கிராமங்களில் அந்தோனியார் முக்கியப்படுத்தப்படுகிறார்) பெயரிலேயே கோயில்கள் அமைந்துள்ளன. பழங்கோயில் சுரூபங்கள், பீடங்கள் எதுவுமற்று வெளிக்கட்டுமானத்துடன் மிகவும் பாழடைந்த நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது. சக்கோட்டைச் சவேரியார்கோயில், சுவாமியாரின் அறைவீடு, பாடசாலை, கிணறு என்பவற்றை ஒன்றிணைத்து சிறந்த நிலையிலேயே இருக்கிறது.. கோயிலையும், கோயிலின் உயரே காணப்படும், குருசையும் (சிலுவை) அடையாளப்படுத்தியே ஆழ்கடல் செல்லும் சக்கோட்டை, ஆறுகாலடி, இன்பருட்டி மீனவர்கள் இன்றும் கரை திரும்புகின்றனர்.
    3 hours ago · Unlike · 1

    நண்பர்களே, இது மிகவும் பயனுள்ள தகவல். இதன் அயலிலுள்ள நிலங்களிலும் இதன் வரலாறு புதைந்திருக்கக்கூடும். இப்பழைய தேவாலயத்தில் இடிபாடுகள் பேணப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். இன்றைய தலைமுறையினர் இவ்விடயத்தில் எவ்வளவு ஆர்வமாயிருக்கின்றனர் என்பதை அறியும்போது எவ்வளவு பெருமையாயிருக்கிறது தெரியுமா?

    பதிலளிநீக்கு