எல்லாம் அழிந்தபின் இதுவும் அழிந்திருக்கும் என்று எண்ணியிருந்தேன். என் எண்ணத்தைப் பொய்ப்பித்து ஞாபகங்களை மீட்டிக்கொண்டிருக்கும் என் கனவுமரம் (தேமா) இது.
எங்களிடம் இன்னமும் களவாடப்படாத உலகொன்று இருக்கிறது. அதற்கும்கூட விலைபேச 'கோட் ரை' யுடன் உலகமயத்தின் சிஷ்யர்கள் கிராமங்கள் தோறும் உலாவருகிறார்கள். ஒருநாளில் என் கமராவில் சிக்கிய அந்த உலகில் இருந்து சில காட்சிகள்.